முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கேரள ஐகோர்ட் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்: மாணியை குற்றமற்றவர் என்று கூறுவதா என கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  கேரளாவில் உம்மன் சாண்டி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் மாணி. அவர் பார் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

மாணி மீதான வழக் கை விசாரணை செய்த கேரள உயர் நீதிமன்றம் மாணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளத என இந்த வழக் கை லஞ்ச ஒழிப்பு கோர்ட் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று கூறியதால் மாணி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இந்த பிரச்சினையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆரம்பத்தில் இருந்தே மாணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். மாணி மீது குற்றம் சாட்டப்பட்டாலும் அது நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி அல்ல என்று உம்மன் சாண்டி கருத் துதெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மாணி மீதான வழக்கு கேரள ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக் கை விசாரித்த நீதிபதி கமால் பாட்ஷா முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து நீதிபதி கமால் பாட்ஷா கூறியதாவது லஞ்சப்புகார் தொடர்பாக மாணி மீது விசாரணை நடந்து வருகிறது. ஆனால் மாணி தவறு செய்ய வில்லை. அவர் குற்றமற்றவர். என்று முதல்வர் உம்மன் சாண்டி கூறுவது கண்டிக்கத்தக்கது.

முதல்வர் இப்படி கூறினால் இந்த வழக் கை போலீசார் எப்படி முறையாக விசாரிப்பார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே சி.பி.ஐ விசாரணைதான் சிறந்தது என்று தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை  டிசம்பர் 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். முதல்வர் உம்மன் சாண்டிக்கு நீதிமன்றம் கேரள ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி முக்கிய எதிர் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில பொதுச் செயலாளர் கொடியேறி பால கிருஷ்ணண் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது பார் ஊழல் வழக்கில் சிக்கிய மாணி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆனாலும் மாணி குற்றமற்றவர் என்று உம்மன் சாண்டி  கூறி வருவத அரசியல் நாடகமாகும்.தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள அவர் இவ்வாறு கூறுகிறார். தேவைப்பட்டால் உம்மன் சாண்டியை ராஜினாமா செய்யக் கோரி போராட்டம் நடத்துவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்