முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரி மலையில் சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்: சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால்  சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் கூட்டம் அலை மோதுகிறது. நடை திறந்து 5வது நாளன்றும் சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சரங்குத்திவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தார்கள்.

கடந்த 5நாட்களுக்கு பிறகு சபரிமலையில் தற்போது மழை குறைந்துள்ளது. இதனால் மலை ஏறும் ஐயப்ப பக்தர்கள் சிரமமின்றி மலை ஏறிச் சென்றனர். சுவாமி ஐயப்பனுக்கு நடைபெறும் முக்கிய பூஜைகளில்புஷ்பாஞ்சாலியும் ஒன்றாகும்.
தினமும் மாலை 5மணிக்கு பஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் மலர்களை கொண்டு வர தேவை இல்லை. அவர்கள் சபரிமலையில் உள்ள தேவசம் போர்டு அலுவலகத்தில் ரூ8ஆயிரத்து 500 கட்டினால் அவர்களுக்கு மலர்கள் தரப்படும். இந்த மலர்களுடன் மலர் மாலை, மலர்  கிரீடம் ஏலக்காய் மாலை ஆகியவை வழங்கப்படும்.

புஷ்பாஞ்சலி  செய்யும் பக்தர்கள் சோபானம் பகுதியில் இருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய விசேஷ அனுமதி அளிக்கப்படும். சபரி மலைக்கு 10வயதுக்கு மேற்பட்ட மேலும் 50வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே  பெண் போலீசார் மூலம் பெண் பக்தர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

அதேப்போல புதின நதியான பம்பையில் நீராடும் பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசக்கூடாது என்றும் மீறி வீசினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள், என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தாலும் அப்பம் மற்றும் அரவணை ஆகியவற்றை தடடுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்