முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-மலேசியா பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் தீவிரமாகும்: மோடி

திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

புத்ரஜெயா(மலேசியா) - பாதுகாப்புத்துறையில் இந்தியா-மலேசியா இடையேயான ஒத்துழைப்பு மேலும் தீவிரமடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி 3நாள் பயணமாக மலேசியாவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் 3வதுநிறைவு நாளான நேற்று இது தரப்பு திட்டங்களை பாரம்பரிய வரவேற்புடன்  துவக்கினார். இந்திய பிரதமர் மோடி மலேசிய பிரதமருடன்  கூட்டாக பேட்டி அளித்த போது கூறியதாவது, இந்தியா-மலேசியா இடையே  பாதுகாப்புத்துறையில்  ஒத்துழைப்பு தீவிரமாகும்.சமீப காலமாக  உலக நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.  இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும்  தீவிரவாத தாக்குதல் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.  தீவிரவாதத்தையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என கூறியிருந்தேன் .

இதற்கு பதிலளித்த மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்  தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுவதில்  முன்னிற்பதாகவும் மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இஸ்லாத்தில் உயரிய நோக்கங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிலுக்காக நான் அவரை பாராட்டுகிறேன். எங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பிற்காக  உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். பாதுகாப்பு சவால்களை எதிர் கொள்வதற்காக நாங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரமாக்க விரும்புகிறோம் .மலேசியாவின் நிர்வாகத்தலைநகரமான புட்ர ஜயாவில் இருவரும் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இந்த கூட்டு பேட்டியில் மோடி இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடி ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்று இருந்தார்.)
தீவிரவாதம் உலகிற்கு பெரும் சவாலாக இருக்கிறது .தீவிரவாதம் மற்றும் பயங்கர வாதத்தை எதிர் கொள்வதற்கு  மலேசிய பிரதமர் நஜீப் தலைமையில்   தீவிரமாக பாடுபட்டு வருகிறார்கள்  அவரது தலைமையை  நான் பாராட்டுகிறேன்.தீவிரவாதம் உலகிற்கு பெரும் அச்சறுத்தலாக இருக்கிறது.

இந்தியாவும் மலேசியாவும்  கடல் சார் பாதுகாப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும். இந்த பிராந்தியத்தில் பேரிடர் உதவி அமைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.இந்தியாவுடன் மேற்கொள்ளும் கூட்டு நடவடிக் கைகளுக்கு மலேசிய பிரதமர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.மேலும் எஸ்.யு 30அமைப்பை ஏற்படுத்தவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். பாதுகாப்பு மற்றும் பயிற்சி துறைகளில்  நாங்கள் ஒன்றிணைந்து பயிற்சி மேற் கொள்வோம்.இரு நாடுகள் இடையே சைபர் பாதுகாப்பிலும்  ஒத்துழைப்பு மேற் கொள்ளப்படுகிறது.

தற்போது தொழில் நுட்பம் நவீனமயமாகியுள்ளது. இதனால் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.இரு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு ஒத்துழைப்புகளும் அதிகரிக்கும்.இருநாடுகள் இடையே மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள நாங்கள் விழைகிறோம்.இந்தியா-மலேசியா நாடுகள் இடையேயான கூட்டை மிக உயரிய நிலைக்கு கொண்டுசெல்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்