முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிவில்லியர்ஸ் மாதிரி ஆட விரும்பும் மகன்கள்: டிராவிட்

திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு - தனது மகன்கள் இருவருமே, டி வில்லியர்சை போன்று பேட்டிங் செய்ய முயல்கிறார்களே தவிர என்னைப்போல இல்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் வீரரும், இந்திய ஏ அணி மற்றும் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர்  ராகுல் டிராவிட் இது குறித்து கூறுகையில்,

எனது மகன்கள் இருவருக்குமே அதிரடியாக ஆடுவதுதான் பிடித்துள்ளது. அப்படி ஆடினால்தான் எளிதில் பிரபலமாக முடியும் என்று நம்புகிறார்கள். டிவில்லியர்சை போன்றே பேட்டிங் செய்ய வேண்டும் என்று எனது மகன்கள் முயலுகிறார்கள்.

ஆனால், சீக்கிரத்திலேயே, அதுபோன்ற பேட்டிங் கஷ்டம் என்பதை உணர்ந்துவிட்டனர் இவ்வாறு டிராவிட் தெரிவித்துள்ளார். பெங்களூர் அளவிலான பள்ளிகள் நடுவேயான கிரிக்கெட் போட்டியில் டிராவிட் மகன் சமித் அசத்தலாக ஆடி, சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்