முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்தியாவில் மேலும் பல சீரமைப்புகள் வரும் சிங்கப்பூரில் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

சிங்கப்பூர் - அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேலும் பல சீரமைப்புகள் இந்தியாவில் மேற் கொள்ளப்படும். அடுத்த ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில்  கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மலேசியா பயணத்தை நிறைவு செய்த பின்னர்சிங்கப்பூருக்கு இரண்டுநாள் பயணமாக  சென்றார்.

அங்கு அவர் நேற்று நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது இந்தியாவில் இரண்டு இந்திய விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் திறன் வாய்ந்த  கூட்டை கண்டறிவதில் இந்தியா முனைந்துள்ளது.

அதேப்போன்று இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களை இந்தியா அழைத்துள்ளது.அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாங்கள் பல சீரமைப்புகளை இந்தியாவில் கொண்டு வருகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வருகிறோம்.இந்த சட்டம் வருகிற ஆண்டு அமலுக்கு வரும்.

கடந்த 18 மாதங்களாக இந்தியாவின் பொருளாதாரம் மேம்படுவதற்கு நடவடிக் கை எடுத்துள்ளோம்.இந்த நடவடிக் கையின் காரணமாக சீரமைப்புகள் பெரும் அளவில் மேற் கொள்ளப்படுகின்றன.பொருளாதார சாதனையை எட்டுவதற்ககான நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.சீரமைப்புகள் இந்தியாவின் முறையை மாற்றுவதுடன் சிறப்பான நிலையும் எட்டப்படும்.மக்கள் தங்கள் கனவுகளை உண்மையாக உணர வேண்டும் என்பது எங்களது இலக்காக இருக்கிறது.எங்களது சீரமைப்புகளால் முகங்களில் கூடுதல் புன்முறுவல் ஏற்படும்.இந்தியாவின் நிதிச்சந்தையை மேலும் சிறப்பாக கொண்டு செல்ல நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதற்கான விதிமுறைகள் விரைவில் தளர்த்தப்படுகின்றன. நாங்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் ஆட்சிக்கு வந்தோம். தற்போது நாங்கள்  நேரடி அன்னிய முதலீடு விதிமுறைகளை மேலும் எளிமையாக்கி இருக்கிறோம்.  இதன் மூலம் அன்னிய முதலீடு விஷயத்தில் இந்தியா திறந்த வெளி பொருளாதாரமாக இருக்கிறது.நேரடி அன்னிய முதலீட்டினை  முந்தைய ஆண்டைக்காட்டிலும் 40சதவீதம் கூடுதலாக பெற்றிருக்கிறோம்.யூகங்கள் எல்லாம் நிதர்சனமான முடிவுகளாக ஆகிக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி வருகிற 2016ம் ஆண்டு அமலுக்கு வரும் என்ற நம்பிக் கை உள்ளது. கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை உருவாக்குகிறோம். வரி விதிப்பு தொடர்பாக 14 சிறந்த நடவடிக் கைகள் மேற் கொள்கின்றோம். முதலீடுகளை செய்வதற்கு இந்தியா மிகப் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது.ஸ்மார்ட் சிட்டிகளை அமைத்தல், மற்றும் ரயில்வே முதல் புதுப்பிக்க தக்க எரி சக்தி வரை முதலீடு செய்ய வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago