முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மக்கள் பாதுகாப்பான உணர்வு நிலையைபெற மத்திய அரசு உறுதியான நடவடிக் கை எடுக்க வேண்டும்

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியாவில் சகிப்புத்தன்மையயற்ற நிலை உருவாகி இருப்பது குறித்து இந்தி நடிகர் ஆமிர் கான் பேசி உள்ளதற்கு பாராட்டு தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய மக்கள் பாதுகாப்பு நிலையை உணரும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது  இந்தியாவில் ஏற்பட்டுள்ள சகிப்புத்தன்மையற்ற நிலை பற்றி இந்தி நடிகர் ஆமிர் கான் பேசி உள்ளார்.

அவரது ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும். அவரது பேச்சு என்னை கவர்ந்துள்ளது.டெல்லியில் திங்கட் கிழமையன்று  ராம் நாத் கோயங்கா பத்திரிகையாளர் விருது நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆமிர் கான் பேசுகையில் இந்தியாவில் நடைபெற்ற சில நிகழ்வுகளால்  இந்த இடத்தில் இருந்து வெளியே சென்று விடலாம் என மனைவி அறிவுறுத்தினார்.

இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக நான் உள்பட  மக்கள் கருதுகிறார்கள். கடந்த 6-8 மாதங்களில் இந்த சகிப்புதன்மையற்ற நிலை அதிகரித்துள்ளதுஎன கூறியுள்ளார்.  சகிப்பு தன்மையற்ற நிலை குறித்து பாஜக மவுனம் சாதிக்கிறது.இந்தியாவில் உள்ள மக்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கும் உணர்வை பெற மத்திய அரசு நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால்தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்