முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா எல்லையில் ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது : துருக்கிக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - சிரியா எல்லையில் ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த இரு பைலட்டுகள் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அரசு ஆதரவு படைகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்த தாக்குதல் நடவடிக் கையில் ரஷ்ய போர் விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில் ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி படுத்தியுள்ளது. ரஷ்ய போர் விமானம் துருக்கி எல்லைப்பகுதிக்குள் நுழைய வில்லை.இருப்பினும் துருக்கிபடையினரால் ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலால் துருக்கியுடனான ரஷ்ய உறவு பாதிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய விமானத்தில் இரு பைலட்டுகள் இருந்தனர் . அவர்களது நிலை என்ன என்று தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது குறித்து ரஷ்யா விசாரணை செய்து வருகிறது. ரஷ்யாவின் சுகோய் 24 போர் விமானம்  துருக்கி தாக்குதலால் நொறுங்கி விழுந்துள்ளது. இதனால் அதில் இருந்த பைலட்டுகள் உயிருடன் இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்