முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் நிலையில் நாடுகள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - உலகம் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் நிலையில் நாடுகள் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியது. சிரியாவின் செனட்டர் கடந்த 1991ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய56வயது பெண் மேரி எமானுல்லே கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறழர். அந்த  பிரெஞ்சு பெண் ணுக்கு சுப்ரீம் கோர்ட்  இடைக்கால நிவாரணம் அளிக்க  மறுத்தது. இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.எஸ் தாகுர், மற்றும் குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வாயம் நேற்று கூறியதாவது

உலகில் தற்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் உலகில் தீவிரவாத நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. எனவே உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அமர்வாயம் தெரிவித்தது.  திகார் சிறையில் உள்ள மேரி தன்னை கைது செய்தது குறித்தும் தன்னை நாட்டை விட்டு வெளியேற்றவும் அரசு நடவடிக் கை எடுத்து வருவதை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி யன்று  சிலி செனட்டர் ஜெய்ம் கஸ்மன் எராசுரிஸ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மேரிக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.அவர் தீவிரவாத நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவரை நாங்கள் அவரை நாங்கள் விடுதலை செய்ய மாட்டோம் என்று உச்ச நீதிமன்றஅமர்வாயம் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நாங்கள் முடிவு செய்வோம் என்று தெரிவித்த அமர்வாயம் இவ்வழக்கின் அடுத்த கட் டவிசாரணை டிசம் பர் 8ம்  தேதியன்று நடைபெறும் என தெரிவித்தது-

குற்றம் சாட்டப்பட்டுள்ள  பெண் மேரியின் வழக்கறிஞர் வாதிடுகையில், பிரெஞ்சு பெண் கைதுசட்டவிரோதம் ஆகும். அவர் மீது சிவப்பு கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.  இந்தியா மற்றும் சிலி நாடுகள் இடையே குற்றச்சாட்டு உள்ள நபரை குற்ற நிகழ்வு நடந்த நாட்டிற்கு அனுப்புவது குறித்து எந்த ஒப்பந்தமும் இல்லை எனவே மேரியை  சிலி நாட்டிற்கு அனுப்பக்கூடாது என்று வாதிட்டார்.  இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் சொலிசட்டர் ஜெனரல் பி.எஸ் பட்வாலியா ஆஜராகி வாதாடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்