முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு விசாரணை: ராசா நடைமுறை விதிகளை மீறியதாக சிபிஐ வாதம்

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு இறுதி விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆ.ராசா விதிகளை மீறியதாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. நேற்றுமுன்தினம் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்ற இறுதி விசாரணையில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டதாவது:  இரட்டை தொழில் நுட்ப உரிமத்துக்கான நிலுவை விண்ணப்பங்களைக் கையாள்வதற்கு, நடைமுறைகளை வகுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்பு ஆணையம் ஆகியவை வலியுறுத்தியும் அவற்றை அப்போதைய அமைச்சர் ஆ.ராசா பின்பற்றவில்லை.

இரட்டை தொழில்நுட்ப உரிமத்தை வழங்க எவ்வித நடை முறைகளும் உருவாக்கப்படவில்லை. ஆ.ராசா நடைமுறைகளை சீர்குலைத்தார். எவ்வித நடைமுறைகளையும் உருவாக்காமல், ஆ.ராசா இரட்டை தொழில்நுட்ப உரிமத்தை வழங் கினார். அமைச்சர் அனுமதிக்கலாம், ஆனால், நடைமுறைகள் எங்கே?  இரட்டை தொழில்நுட்ப உரிமம் குறித்த பொது அறிவிப்பு வெளியிடவில்லை. ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அதிக பட்சசாதகமாக அந்த உரிமத்தை தன்னிச்சையாக வழங்கினார். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்