முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம் – புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது.,
 
மாலத்தீவு–லட்சத்தீவு அருகில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது.தற்போது புதிதாக இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக தமிழகம் – புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும். மேலும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்யும். நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. அடுத்த 48 நேரத்திற்கு பிறகு ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும்.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பதிவாகி உள்ளது.  அதிகப்பட்சமாக பாபநாசம் 18 செ.மீ., தாம்பரம் 17 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 16 செ.மீ., விமான நிலையம் 14 செ.மீ., கேளம்பாக்கம், கலவை, காஞ்சிபுரம், பூந்தமல்லியில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.மகாபலிபுரம் 12 செ.மீ., கொளப்பாக்கம், ஆவடி, செம்பரம்பாக்கம், செங்கல்பட்டு 11 செ.மீ., காட்டுக்குப்பம், தரமணி, காவேரிபாக்கம் 10 செ.மீ., நுங்கம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம் 9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை சராசரியாக 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 3 மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை 20 நாட்களில் 48 செ.மீ. அளவுக்கு பெய்து சராசரி அளவைவிட 4 செ.மீ. கூடுதலாக பெய்து உள்ளது.சென்னை மாவட்டத்தில் சராசரி மழை 79 செ.மீ. மழை பெய்ய வேண்டும். தற்போது 114 செ.மீ. மழை பெய்துள்ளது என்று ரமணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்