முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாராக் கடனை திரும்பப் பெற வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம்: ஜெட்லி தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செலுத்தாமல் உள்ளனர். இத்தகையோரிடமிருந்து கடனைத் திரும்பப் பெறுவதற்கு வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.  டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடனான ஆலோசனை நடைபெற்றது. வங்கிகளின் 2-ம் காலாண்டு செயல்பாடு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக்கடன் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு 6.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் இது 5.20 சதவீதமாக இருந்தது.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் சில குறிப்பிட்ட துறைகளிலிருந்து வாராக் கடன் அளவு அதிகமாக இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. சில குறிப்பிட்ட துறையினர் பொது வாகவும் பரவலாகவும் அனைத்து வங்கிகளிலும் கடன் பெற்றிருப்பதும், அத்துறையினர்தான் வங்கி களின் வாராக்கடன் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. 

வங்கிகள் அனைத்தும் வாராக் கடனை வசூலிப்பதில் உறுதியோடு இருக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவர்கள், நிறுவனங்கள் விஷயத்தில் வங்கிகள் சுதந்திரமாக செயல்பட்டு கடனை வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்றும் ஜெட்லி குறிப்பிட்டார். தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் பிஷர் நிறுவனம் பெற்றுள்ள ரூ. 7 ஆயிரம் கோடி கடன் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்