முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் இந்தியா 215ரன்னுக்கு ஆல் அவுட்

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர்: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது  கிரிக் கெட் டெஸ்ட்டில் இந்திய அணிமுதல் இன்னிங்சில் 215ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி தற்போது இந்தியாவில் ஆடி வருகிறது.மொகலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்ட் டிரா ஆனது.

இதனைத்தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் துவங்கியது. இந்திய  அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசியதால் இந்திய பேட்ஸ்மென்கள் அதனை தாக்கு பிடிக்க முடியாமல் ரன் குவிக்க முடியாமல் அவுட் ஆனார்கள்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சை 215ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 3வது முறையாக இந்த தொடரில் 200 ரன் என்ற நிலையில் ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணி மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருந்தபோதும் அதில் 201ரன்னுக்கும் 200ரன்னுக்கும் அவுட் ஆகி இருந்தது. இந்த 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் அதிகப்பட்சமாக 40ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 34ரன்களையும்அவரைத்தொடர்ந்து விக் கெட் கீப்பர் விருத்தமான் சகா 32ரன்களை யும்  எடுத்திருந்தார்கள்.

இந்திய அணி வீரர் செட்டேஷ்வர் புஜாரா 21ரன்னும் காப்டன் விராத் கோலி 22ரன்னும் பெற்று ஆட்டமிழந்தார்கள். இந்திய அணியின் விக் கெட்டுகள் மளமளவென சரிவதற்கு தென் ஆப்பிரிக்க அணியின்வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் முக்கிய காரணமாவார். அவர் 35ரன்னுக்கு 3விக்கெட்டுகளை சரித்தார். ஜடேஜா தென் ஆப்பிரிக்க அணியின் சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துகளை விளாசினார் .அவர் 73நிமிடம் களத்தில் இருந்தார் . அவரது 34ரன்னில் 6பவுன்டரிகள் இடம் பெற்றிருந்தன.

தென் ஆப்பிரிக்க அணியில் சுழல் பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் டிரா ஆன 2வது பெங்களூரு டெஸ்ட்டில்  ஆட வில்லை. அவர் மொகாலியில் (பஞ்சாப்) நடந்த முதல் டெஸ்ட்டில் இடம் பெற்றிருந்தார். அந்த வீரர் இந்த 3வது டெஸ்ட்டில் சேர்க்கப்பட்டார். அவர் 78ரன்களை தந்து 4விக்கெட்டுகளை சரித்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் பந்து வீசிக் கொண்டிருக்கும் போது தசை பிடிப்பால் திடீரென்று அவதிப்பட்டார்.

இதனால் அவர் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை.இந்திய அணியின் இன்னிங்சில் விஜய்யும் தவானும் ஜோடி சேர்ந்து 50ரன் சேர்த்தார்கள். இதனைத்தொடர்ந்து விருத்தமான் சகா மற்றும் ஜடேஜா ஜோடி 48ரன் களை சேர்த்தது.இந்திய அணியின் கடைசி 4விக் கெட்டுகள் 90ரன்களை சேர்த்தன. இதனைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஆடியது. இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தென் ஆப்பிரிக்க அணியின் இடது கை ஆட்டக்காரர் வான் சைலை பூஜ்யத்தில் ஆட்டமிழக்க செய்தார். இரவு நேர ஆட்டக்காரராக ஆட வந்த இம்ரான் தாகிர் 4ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 2விக் கெட் இழப்புக்கு 11ரன்களை எடுத்திருந்தது. நேற்று தென் ஆப்பிரிக்க அணியினர் 9ஓவர்களை ஆடி இருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago