முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் மோதல்: 3 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் பலி

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

ஶ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ராணுவம்முகாம்  இருந்த பகுதிக்குள் தீவிரவாதிகள் அதிகாலையில் ஊடுருவி தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது ராணுவத்தினர்  தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் கடுமையாக சுட்டார்கள்.

பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் . இந்த சண்டையின் போது பொதுமக்களில் ஒருவர் பலியானார். தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ஒரு ராணுவ அதிகாரி காயம் அடைந்தார் என்று ராணுவ செய்தி தொடர்பாளரான கர்னல் மணிஷ் குமார் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஶ்ரீநகரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.நேற்று மாலையும் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை தொடர்ந்தது. காஷ்மீரின் தாங்தர் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது.இந்த முகாமிற்கு அருகே தீவிரவாதிகள் நேற்று திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான பனி நிலவும் நேரத்தில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினார்கள்.அவர்கள்தர்ஷக் வனப்பகுதியில் இருந்து அதிகாலையில் ராணுவ முகாம் பகுதிக்குள் நுழைந்தார்கள். முகாம் பகுதியில் இருந்த எரிபொருள் டெப்போ துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago