முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிசியாவில் பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 12 பேர் பலி

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

துணிஸ்: வடக்கு ஆப்பிரிக்க நாடான  துனிசியாவில் அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் சென்ற பஸ்ஸின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்.

துனிசியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த சர்வாதிகாரி ஷின் எல் அபிடின் பென்அலி பதவியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து அங்கு ஜனநாயக முறையில் முதன் முறையாக அண்மையில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் பெஜி காய்டு எசெப்சி வெற்றி பெற்று அதிபரானார்.

இந்நிலையில் துனிசியா நாட்டு தலைநகர் துணிஸில் உள்ள முகமது-வி-அவென்யூ என்ற இடத்தில் அந்நாட்டு அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் ஒரு பஸ்ஸில் சென்று கொண்டுருந்தனர். அப்போது தீவிரவாதிகள் அந்த பஸ்ஸின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என  துனிசியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில்,  இதுவரை எந்த அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து துனிசியாவில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்து அதிபர் பெஜி காய்டு எசெப்சி  தெரிவிக்கையில்,

இது மிகவும் துயரமான சம்பவம். நாட்டில் அமைதியை நிலைநாட்ட அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க அமெரிக்கா உதவும் என்று துனிசியா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago