முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர் பார்ப்பு

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் இந்திய அணி ஆடும் கிரிக் கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக் கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய கிரிக் கெட் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக் கெட் அணிக்கும் இடையேயான தொடரை நடத்த இரு நாட்டு அரசுகளும் இதுவரை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் இந்ந இருநாடுகளும் போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய கிரிக் கெட் வாரியம்வேண்டுகோள் விடுத்துள்ளது.இதனை இந்திய கிரிக் கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக் கெட் போட்டிகளை இலங்கையில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நான் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளேன் என்று தாகுர் தெரிவித்தார். இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்துவதற்கு ஆலோசனை கூறப்பபட்டிருந்தது. ஆனால் அங்கு போட்டி நடத்துவதை இந்திய கிரிக் கெட் வாரியம் விரும்பவில்லை.எந்த இடத்தில் விளையாடுவது என்பதை பாகிஸ்தான் அரசு முடிவு செய்ய வேண்டும்.இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியமும் விவாதித்த பின்னர் இருநாடுகளும் இலங்கையில் ஆடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் பொதுவான ஆடுகளமாக இலங்கை இருப்பதை இரு நாடு அரசுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்என தாகுர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இலங்கையில் போட்டி நடத்துவது குறித்து பாகிஸ்தான் அரசின் அனுமதியையும் அந்த நாட்டு கிரிக் கெட் வாரியம் எதிர்பார்த்துள்ளது. அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தற்போது சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் நாடு திரும்பியதும் இது குறித்து உரிய முடிவு எடுப்பார் என பாகிஸ்தான் கிரிக் கெட் வாரிய தலைவர் சகார் யார் கான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்