முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாலுவுடன் புகைப்படம் எடுத்த விவகாரம்: ஹசாரே கண்டனத்திற்கு கெஜ்ரிவால் மறுப்பு

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலுவுடன் ஒரே மேடையில் கைகளை குலுக்கி புகைப்படம் எடுத்த கெஜ்ரிவாலுக்கு அண்ணா ஹசாரே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பீகார் முதல்வராக கடந்த வெள்ளிக்கிழமை நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார்.  இந்த விழாவில் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றார். அப்போது மேடையில் இருந்த லாலு கெஜ்ரிவாலை அழைத்து கட்டியணைத்தார். அத்துடன் அவரது கைகளையும் உயர்த்தி வெற்றிச் சின்னத்தை காண்பித்தார். மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் லாலுவை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால், திடீரென அவருடன் கைகோத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் இதற்கு கடும் விமர்சனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவரான யோகேந்திர யாதவ், அரசியலில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் லாலுவுடன், கெஜ்ரிவால் இணைந்தது அவமானமாக இருக்கிறது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தன் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அவர் நிருபர்களிடம் கூறும்போது.,

ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த கெஜ்ரிவால், மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலு போன்றவர்களின் கரங்களை பிடித்து மகிழ்ச்சியாக குலுக்குவதும், கட்டி அரவணைப்பதும் சரியாக தோன்றவில்லை என்றார். மேலும், தற்பொழுது நானும் கெஜ்ரிவாலும் பிரிந்து விட்டோம். இல்லையெனில் நானும் அவரைப்போல் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டிருப்பேன்  என கூறியுள்ளார். தற்பொழுது, இந்த சம்பவம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்.,

நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழா மேடையில் லாலுபிரசாத் யாதவ் அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் லாலு தான் எனது கைகளை பிடித்து இழுத்து கட்டிப்பிடித்தார். நான் கட்டிப்பிடிக்கவில்லை. லாலு பிரசாத்தின் குடும்ப அரசியலை எதிர்க்கிறேன். எனவே லாலு கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago