முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் வரலாறு காணாத வெள்ளத்தில் தவிப்பதற்கு காரணம் கடந்த திமுக ஆட்சியே : புதிய தகவல்கள

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகம், வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வெள்ளத்தில் மிதக்க கடந்த கால திமுக ஆட்சியே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் வைர வரிகளில் சொல்வதானால், மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை காணாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களை அனுப்பி போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டனர். சென்னை- காஞ்சிபுரம் மாவட்டங்களில் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது ஒரு பக்கமிருக்க முதல்வர் ஜெயலலிதா, தானே களத்தில் இறங்கி, சென்னை ஆர்.கே. நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், அம்பத்தூர் என்று ஐந்து தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து, மழை வெள்ளம் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் சகோதரி தலைமையிலான அரசு இருக்கிறது.என்று ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார்.. இதனால் மழை வெள்ளத்தில் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் ரூ 2 ஆயிரம் வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. இதன் பலனை தமிழகம் முழுவதும் குடிசைகள் முதல் மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வரை .பெற்றனர். எனவே சொன்னால் செய்வார் அம்மா என்பதால் ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகளில் மக்கள் நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தனர். முதல்வரும் சொன்னதோடு நில்லாமல் . மழை வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ2 லட்சமாக இருந்த உதவித்தொகையை 4 லட்சமாக உயர்த்தினார். மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த குடிசைகள் முதல் கால்நடைகள் வரை இழப்பீட்டுத் தொகையையும் அதிகரித்து முதல்வர் உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் வலம் வந்து தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் துணையோடு அகற்றினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னையில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைக்கால மருத்துவ முகாம்களை ஆங்காங்கே தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய நிலவேம்பு குடிநீர் பட்டித்தொட்டியெங்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக ஆயிரத்து 61 இடங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் அமைக்கப்பட்ட மழைக்கால மருத்துவமுகாம்களும், மக்களுக்கு லட்சக்கணக்கான லிட்டர் அளவுக்கு வழங்கப்பட்ட நிலவேம்பு குடிநீரும் மழைக்கால நோய்களுக்கு வழியில்லாமல் செய்தன என்றே கூறலாம்.

கடலூர் மாவட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார். எம்.சி. சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கு மழை வெள்ளம் பாதித்த மக்களை ஒரு கிராமம் விடாமல் சந்தித்து முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வழங்கிய நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினர். ஆங்காங்கே தேங்கிய மழை நீரையும் அகற்றிட உத்தரவிட்டு, புயல் வேக நடவடிக்கை மேற்கொண்டனர். மற்ற மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்தந்த அமைச்சர்கள் நடவடிக்கைகளில் இறங்கினர், இது ஒரு பக்கமிருக்க சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா, ஆணுக்கு பெண் இங்கே இளைப்பில்லை என்று பாரதியின் புதுமைப்பெண்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு , மக்களை சந்தித்து தங்க இடமளித்து, உண்ண உணவளித்து , உடையும் கொடுத்து சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகாரிகள் மட்டுமல்ல: அமைச்சர்களும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. அதில் ஆர்வம் காட்டவில்லை. முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் மாநிலமே பாராட்டியது.

ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் பாராட்ட மனம் இல்லாமல், நாள்தோறும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். திமுக பொருளாளர் மு..க.ஸ்டாலின் நாள்தோறும் கொளத்தூரை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்து மழை நிவாரண நடவடிக்கைகள் பற்றி கடும் விமர்சனம் செய்து வருகிறார். கடந்த காலத்தில் நீர்நிலைகள்-ஏரிப் பகுதிகள் குடியிருப்புகளுக்கு ஏற்ற இடமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு திமுக ஆட்சிக்காலத்தில் மீறப்பட்டது. ஏரிகள்-குளங்கள் அனைத்தும் திமுக மற்றும் அவர்களது பினாமி ரியல் ஸ்டேட் செய்யும் தொழிலதிபர்களின் கையில் சிக்கியது. அனைத்தும் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு, அவை சொந்த வீட்டு கனவோடு இருந்த ஏழை-நடுத்தர மக்களிடம் விற்கப்பட்டன. விதிகளை மீறி ஏரி பகுதிகளில் குடியிருந்தவர்களுக்கு பட்டாக்களும் பல லட்சக்கணக்கில் வழங்கப்பட்டன.

திமுக ரியல் எஸ்டேட் பினாமிகள் விற்ற நிலங்கள் வீடுகளைக் கட்டியவர்கள் இப்போது கண்ணீர் கடலில் ஆழ்ந்து வருகின்றனர். இப்போது பெய்த அதிக மழையால், இதுவரை நீரைப் பார்க்காத குளம்-குட்டை-ஏரிகளில் மழை நீர் பாய்ந்தோடியது. குளம்-குட்டைகளில் வீடுகளைக் கட்டிய சென்னை மற்றும் புறநகர் வாசிகள், திடீரென பாய்ந்து வந்த மழை-வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றனர். இதுவே, சென்னையும்-மாநிலத்தின் மற்ற பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்க காரணமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கோபத்துடன் கூறுகிறார்கள். ஏற்கெனவே நில அபகரிப்பு புகார்களிலும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி இருக்கும் திமுகவினர் மீது ஏரிகளை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்றது

தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தால் உண்மைகள் வெளியாகும் என்கிறார் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் . மழை வெள்ளத்திற்காக அதிமுகவை குற்றம்சாட்டும் திமுக தலைவர் கருணாநிதி, தான் பேரறிஞர் அண்ணா காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். தமிழகத்தில் இருக்கும் ஆறுகள், அணைகள் , ஏரிகள் அனைத்தும் அவருக்கு அத்துபடி. அதை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகள் கருணாநிதிக்கு தெரியாததல்ல. அவருக்குப் பின் திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தார். சட்டப் பேரவையில் பொதுப்பணித் துறை சார்பில் ஒரு கால்வாய் தொடர்பாக கேள்வி கேட்டாலும் அதற்கு மனப்பாடமாக பதில் சொல்வார். அத்தகைய திமுகவினருக்கு சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் எந்தெந்த ஏரிகள்-குளங்கள்-கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது நன்கு தெரியும். ஆனால், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் எந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற முன்வரவில்லை. ஆனால், இப்போது ஊரை ஏமாற்றவும், தேர்தல் நெருங்குவதாலும் திமுக தலைவர் கருணாநிதியும், அவரது மைந்தர் மு.க.ஸ்டாலினும் அறிக்கைகள் என்ற பெயரிலும், நேரில் ஆய்வு என்ற நாடகத்தாலும் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். அது, கனவிலும் நடக்காது என்பது நடுநிலையாளர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago