முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா வான் வழித்தாக்குதலில் பிரிட்டன் கட்டாயம் இணைய வேண்டும் எம்.பிக்களுக்கு பிரதமர் கேமரூன் கடிதம்

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் சிரியாவில் வான் வழித்தாக்குதலை பிரிட்டனும் மேற் கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு எம்.பிக்களிடம் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தினார்.  சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்கா, ரஷ்யா உள்பட சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சிரியாவின் வான் வழி தாக்குதலில் பிரிட்டனும் இணைய வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் எம்.பிக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எம்பிக்களுக்குஅர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது,  சிரியாவில் ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு நாமும் வான் வழித்தாக்குதலை நடத்த வேண்டும். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பாதுகாப்பாக இருக்கக்கூடாது. பிரிட்டனின் பாதுகாப்பு நலனைக்கருத்தில் கொண்டு இந்த தாக்குதல் நடத்த வேண்டும். பிரிட்டனின் கூட்டாளிகள் மட்டும் சுமையை செலுத்த கூடாது.

பிரிட்டனின் பாதுகாப்பு குறித்து பிற நாடுகளை சார்ந்து இருக்கக்கூடாது.  சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வளரக்கூடாது. அந்த தீவிரவாதிகள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக் கெடுப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில் சிரியா வான் வழி தாக்குதலை நடத்துவதை ஆதரிக்க எம்பிக்களை கேமரூன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 13ம் தேதியன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130 அப்பாவி மக்கள்  கொல்லப்பட்டார்கள்.

இந்த தாக்குதலுக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இந்த தாக்குதலைத்தொடர்ந்து சிரியாவில் பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்த பிரதமர் கேமரூன் வலியுறுத்தி இருக்கிறார். பிரிட்டன் பிரதமர் கேமரூன் கடந்த திங்கட் கிழமையன்று பாரிஸ் சென்று அந்த நாட்டின் ஜனாதிபதி பிரான்காய்ஸ் ஹாலேன்டேவை சந்தித்தார். அப்போது அவர் தீவிரவாதிகளால்கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

பாரிசில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் சிரியாவில் வான் வழி தாக்குதலை நடத்துவதை நான் முழுவதும் ஆதரிக்கிறேன் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் என்று தெரிவித்தார். ஈராக்கில் பிரிட்டன் படைகள் வான் வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. ஆனால் சிரியா தாக்குதலில் பிரிட்டன் படைகள் இன்னும் ஈடுபட வில்லை. எதிர் கட்சி எம்.பிக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் சிரியா தாக்குதலை பிரிட்டன் இன்னும் தொடங்க வில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்