முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமானது: நாகாலாந்து எம்.பி. மறைவுக்கு இரங்கல்: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதை முன்னிட்டு மாநிலங்களவையில் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கெக்கியோ ஜிமோமி மரணமடைந்ததை அடுத்து ராஜ்யசபா நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளான நேற்று ராஜ்யசபாவில் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி இரங்கல் குறிப்பு ஒன்றை வாசித்தார். அப்போது அவர், நாகாலாந்து எம்.பி. கெக்கியோ ஜிமோமொ உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டதாகக் கூறினார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜிமோமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். 69 வயதான கெக்கியோ ஜிமோமி, சமூக ஆர்வலர். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பிவந்தார்.  அவர் மறைவு குறித்து மாநிலங்களவை தலைவர் அன்சாரி கூறும்போது,  கெக்கியோ மறைவால் இந்த பாராளுமன்றம் ஒரு சிறந்த உறுப்பினரை இழந்துவிட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெர்விக்கும் வகையிலும் மறைந்த முன்னாள் எம்.பி.க்கள் ராஜேந்திரன், ராம் கப்சே, ருத்ர பிரதாப் சிங் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது" என்றார்.

இதேபோல் மக்களவையில் துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரின் போது முதல் நாளான நேற்று  அரசமைப்புச் சட்ட சிற்பியான அம்பேத்கரின் 125-வது ஆண்டு பிறந்த தினத்தின் அங்கமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான ஈடுபாடு குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற பா.ஜ.க. - காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் மதச்சார்பின்மை மற்றும் சகிப்பின்மை தொடர்பாக ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்