முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 2016-ம் ஏப்-1 முதல் பூரணமதுவிலக்கு அமல்: முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். முன்னதாக, பீகார் சட்டசபை தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரணமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்திருந்தார். இத்தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.

முதல்வராக நிதிஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார்.,

தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் மதுவுக்கு எதிராக பீகாரில் பெண்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதும் பாராட்டுக்குரியது என்றார். வட இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் மதுவிற்பனைக்கு தடை அமலில் உள்ளது. தென்னிந்தியாவில் கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago