முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டைவிட 19 மாவட்டங்களில் கூடுதல் மழை

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, வடகிழக்கு பருவ மழையான இந்த கால கட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 19 மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்துள்ளது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்டோபர் மாதம் 28–ந் தேதி தான் தொடங்கியது.அன்று முதல் இன்று வரை அவ்வப்போது கனமழை பெய்ததால் தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இப்போது உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.இதில் ஒரு நாளில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 48 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 34 செ.மீ. மழையும் பெய்ததால் அந்த மாவட்டம் வெள்ளத்தில் மிதந்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளாக இயல்புக்கு எஞ்சிய அளவிலேயே மழை பதிவானது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இயல்புக்கு குறைவாகவே மழை பெய்தது.2012-ம் ஆண்டில் 13 சதவீதமும் 2013-ம் ஆண்டில் 33 சதவீதமும் இயல்புக்கு குறைவாகவே மழை பதிவானது.தென் பசிபிக்கடல் பகுதிகளில் இயல்பை காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில் வடகிழக்கு பருவ மழையானது அதிகம் பெய்யும். அதேபோல் இந்த ஆண்டு அதிகம் மழை பெய்துள்ளது.புயல் வரும்போது கிடைக்கும் மழையை காட்டிலும் காற்றழுத்த தாழ்வின் போது கிடைக்கும் மழை அதிகமாகும்.அதைபோல் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மூலம் நமக்கு அதிக மழை கிடைத்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 2005-ம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தைவிட இப்போது பெய்துள்ள மழை அதிகம் ஆகும்.வங்க கடல் பகுதியில் 2013-ம் ஆண்டு அதிக அளவில் புயல்கள் உருவானது. ஆனாலும் அவை தமிழகம் நோக்கி வரவில்லை. இதனால் அந்த ஆண்டு இயல்பைவிட 33 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது.இப்போது தொடர்ந்து வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி வந்ததாலும் அதே சமயத்தில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானதாலும் தமிழகத்துக்கு மழை அதிகம் கிடைத்து விட்டது.இதில் கடந்த 25-ந் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி உள்பட 19 மாவட்டங்களில் இயல்பைக் காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளது.அரியலூர், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை உள்பட 13 மாவட்டங்களில் இயல்பு நிலை அளவுக்கு மழை கிடைத்துள்ளது.இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 822.3 மி.மீ. மழை பெய்துள்ளது.தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கூடுதலாக மழை பதிவானவை மில்லி மீட்டரில் வருமாறு:–சென்னை 140.4 (114செ.மீ.),காஞ்சிபுரம் 1189.4 (118 செ.மீ.),திருவள்ளூர் 1058.8 (105 செ.மீ.),கடலூர் 787.2 ,தர்மபுரி 399.5,ஈரோடு 331.1,கன்னியாகுமரி 626.8,கிருஷ்ணகிரி 418.3 ,நாகை 847.5 ,நீலகிரி 464.7 ,பெரம்பலூர் 409.5 ,புதுக்கோட்டை 394.4 ,சேலம் 416.1 ,திருநெல்வேலி 715.6 ,திருவண்ணாமலை 439.7 ,திருவாரூர் 566.2தூத்துக்குடி 464.5 ,வேலூர் 650.1 ,விழுப்புரம் 569.8

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்