முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் அரசமைப்புச் சட்டம் பற்றி பாடம் எடுப்பதா? மாநிலங்களவையில் ஜெட்லி தாக்கு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்தவர்கள் தற்போது அரசமைப்புச் சட்ட கொள்கைகள், லட்சியங்கள் பற்றி பாடம் எடுக்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் மீது தாக்கி பேசினார். இது குறித்து அவர் மாநிலங்கலவைில் அவர் பேசியதாவது., அவசரநிலை காலக்கட்டத்தில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அவசரநிலை காலக்கட்டத்தில் அரசமைப்புச் சட்டம், பிரிவு 21-க்கு விரோதமாக மக்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமையை இழக்கச்செய்யப்பட்டனர். அதாவது பிரிவு-21 செயலிழக்கச் செய்யப்பட்டது. ஆனால், அவசரநிலை காலக்கட்டத்துக்குப் பிறகு அரசமைப்புச் சட்டம் பிரிவு 21-ஐ நீக்க முடியாத வண்ணம் மாற்றப்பட்டது, இதனால் நாம் நேற்று பாதுகாப்பாக இருக்கிறோம்.

மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்த அவசரநிலைப் பிரகடனத்தை ஆதரித்தவர்களெல்லாம் நேற்று அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகள், லட்சியங்கள் பற்றி பேசுகின்றனர். அவசரநிலை காலக்கட்டத்தில் மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்தனர். அது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால். அரசியலமைப்பு சட்டத்தை மீறி நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்து, மக்களின் வாழும் உரிமையை பறித்தது காங்கிரஸ் கட்சி. எனவே, சகிப்பின்மை பற்றி பேசுவதற்கு காங்கிரசுக்கு தகுதியில்லை. ஜெர்மனியில் கடந்த 1930-களில் ஹிட்லர் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். 1933-ல் ஜெர்மனியில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. பத்திரிகைகளை ஹிட்லர் தணிக்கைப்படுத்தினார். எதிர்ப்பவர்களை சிறையில் அடைத்தார். அதுபோல் கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சியை கொண்டு வந்தார் இந்திரா காந்தி.

காங்கிரஸ் கொண்டு வந்த எமர்ஜென்சியின்போது, நீங்கள் எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்தீர்கள். சட்டத்தை மாற்றினீர்கள், எல்லாவற்றுக்கும் தணிக்கை கொண்டு வந்தீர்கள். அரசமைப்பு சட்டங்களைப் பற்றி கவலைப்படாமல், மக்களின் வாழும் உரிமையைகூட எமர்ஜென்சி மூலம் பறித்தீர்கள். நேற்று யாராவது ஒருவர் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு கருத்தை கூறினால் அது சகிப்பின்மை என்று குற்றம் சாட்டுகிறோம்.

எனவே, எமர்ஜென்சி போன்ற ஒரு காலம் மீண்டும் நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அம்பேத்கர் நமது அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதி. அவர் சமுதாயத் தீமைகளுக்கு எதிராக போராடினார். சமூக அநீதியிலிருந்து தப்பிக்கும் வழியை காட்டினார், சமூகப் பாகுபாட்டுக்கு எதிராக போராடும் வழியையும் அவர் காண்பித்தார். கடந்த 65 ஆண்டுகளில் ஜன்நாயகம் வலுவடைந்துள்ளது.

அம்பேத்கர் வடிவமைத்த அரசமைப்புச் சட்டம் மத ஆட்சியை மறுத்தது. அரசமைப்புச் சட்டம் மதத்துக்கு ஆதரவானதோ எதிரானதோ கிடையாது, மதத்தைக் கொண்டு மக்களைடையே பாகுபாடு காட்டக்கூடாது என்பதையே அது வலியுறுத்துகிறது
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago