முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணை இன்று திறப்பு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்ன - மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதலமைச்சர்ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: - தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக்கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில் இரண்டாவதுபோகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின்கீழ் உள்ளஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறுபிரதானக் கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில்இரண்டாவது போகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக்கால்வாயின்கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும்இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும்பாசனத்திற்காக இன்று முதல்( 28ம்தேதி முதல் ) வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்மாவட்டங்களில் உள்ள 2,59,663 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதைநான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்