முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சீரமைப்பு - மறுவாழ்வு பணிகளுக்கு மத்தியக் குழுத் தலைவர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

கடலூர் - கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான முயற்சி எடுத்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்ளு மத்தியக்குழுத்தலைவர், மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத்  பாராட்டு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையினை ஏற்று, கடலூர் மாவட்டத்திற்கு நேற்று மத்தியக்குழுத்தலைவர், மத்திய உள்துறை இணைச் செயலாளர் வி.எஸ்.என்.பிரசாத்  தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் பார்வையிட வருகைபுரிந்துள்ளார்கள். 

இக்குழுவில் மத்திய வேளாண்மைத்துறை கூடுதல் ஆணையர் ஒய்.ஆர்.மீனா, மத்திய நிதித்துறை இணை இயக்குநர் எம்.எம்.சச்தேவா, மத்திய குடிநீர் துறை முதுநிலை ஆலோசகர் ஜி.ஆர்.ஜார்கர், மத்திய குடிநீர் துறை முதுநிலை மண்டல இயக்குநர் டாக்டர்.ஆர்.ரோஷினி, மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குநர் சுமித் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பி.சி.பெஹரா, மத்திய நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் என்.எம்.கிருஷ்ணன்உன்னி, மத்திய சாலை போக்குவரத்துத்துறை மண்டல இயக்குநர் டி.எஸ்.அரவிந்த் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரிக்கு வருகைபுரிந்த இக்குழுவினர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  இவர்களுடன் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா வேளாண்மைத்துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் வருகைபுரிந்துள்ளார்கள்.  இதனைத் தொடர்ந்து, இக்குழுவினர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி, மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார்  மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சித்துறை ஆகிய அனைத்துத் துறை அலுவலர்களுடன் வெள்ளச்சேதங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார், கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும், 09.11.2015 முதல் பெய்த கனமழையினாலும், ஒரே நாளில் 183 செ.மீ. மழை பெய்ததாலும், எதிர்பாரா விதமாக வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டது.  வெள்ளச்சேதங்களை பார்வையிட்டு மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் 6 அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து முகாமிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

அதன்பேரில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரும் பணியினை பார்iவியட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.  மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். பின்னர், இக்குழுவினர் விசூர் கிராமத்தில் உள்ள காட்டாற்றின்கீழ் கட்டப்பட்டுள்ள பாலத்தில் புதுப்பிக்கப்பட்ட கரைப் பகுதிகளையும் பார்வையிட்ட பின்னர், அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றுவருதை நேரடியாக பார்வையிட்டார்கள்.  மேலும், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கண்காணிப்புப் பொறியாளர்  கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் வெள்ளச்சேதங்கள் எப்படி ஏற்பட்டது, என்ற விவரத்தை புகைப்படங்கள் மூலம் குழுவினருக்கு விளக்கமாக தெரிவித்தார். 

அதை பார்த்த பின்னர், குழுவினர் விசூர் கிராமத்திற்குள் வீதிவீதியாக சென்று அங்கு பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். இக்குழுவினரிடம் வடிவேல் என்பவர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் என்னுடைய வீடு இடிந்து பாதிப்படைந்தது.  மேலும், இவ்வெள்ளத்தில் எனது மனைவி மற்றும் மகள் அடித்துச் சென்று இறந்து விட்டனர்.  மற்ற இரண்டு பிள்ளைகளான 1 ஆண் பிள்ளை பன்னிரண்டாம் வகுப்பும், மற்றொரு ஆண் பிள்ளை 8ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.  வெள்ள பாதிப்பு ஏற்பட்ட அன்றைய தினம் நாங்கள் புளியமரத்திலேறி தப்பித்து உயிர் பிழைத்தோம்.  எனது மனைவி மற்றும் மகள் இறந்தது, மறுநாள்தான் எனக்கு தெரியவந்தது.  மேலும், ஒரு இரவிற்கு பிறகுதான் இருவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.  இருவர் இழப்பிற்கும் தலா ரூ.4 லட்சம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. 

எனக்கு ஒரு நிரந்தர வீடு கட்டித்தர வேண்டுமென குழுவிடம் கோரிக்கையினை தெரிவித்தார். உக்கிரவேல், கிருஷ்ணமூர்த்தி, குமரவேல் ஆகியோரது வீடு மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என குழுவிடம் தெரிவிக்கப்பட்டதற்கு, குழுவின் முன்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் , இவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவித்தார். மகேஸ்வரி என்பவர் தன்னுடைய வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்றும், ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டது பாதிப்படைந்துள்ளது என்றும் குழுவினரிடம் தெரிவித்தார்.  கணபதி என்பவர் மழை வெள்ளத்தால் தனது நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், 45 ஹெக்டரில் காய்கறிகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவ்வாறு பாதிப்படைந்த காய்கறிகள் மற்றும் மரவள்ளிக் கிழங்கினை குழுவின் பார்வைக்கு காண்பித்தார்.

பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள பெரிய ஓடை, சிறிய ஓடையில் பாதிப்பு ஏற்பட்டதை பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கண்காணிப்புப் பொறியாளர் , இரு ஓடைகளுக்கும் இடையில் தண்ணீர் அதிகமாக வந்ததால் பாதிப்பு ஏற்பட்டு ராஜேஸ்வரி கஃபெ.ரங்கசாமி என்ற ஒரே குடும்பத்தில் 9 நபர்கள் இறந்துவிட்டார்கள் என்றும் குழுவிடம் தெரிவித்தார். குப்பன் என்பவர் குழுவிடம், எனது வீடு, 15 ஆடு, 1 மாடு மற்றும் மிக்சி, கிரைண்டர் ஆகியவை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.  எனக்கு ஒரு நிரந்தர வீடு கட்டித்தர வேண்டும் என்று தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து, பெரிய ஓடை, சிறிய ஓடையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.  பின்னர், பெரிய காட்டுப்பாளையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஷெட்டினை பார்வையிட்டார்.

மத்தியக்குழுத்தலைவர், மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது.  தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கேற்ப மத்திய அரசு உத்தரவின்படி, மின்வாரியத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை போன்ற பல்துறை அமைச்சகக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.  சாலை வழியாக சென்று ஆய்வு நடத்தினோம்.  நாங்கள் பார்வையிட்ட பெரியகாட்டுப்பாளையம் மழையினால் கடும் சேதமடைந்துள்ளது. அதிக உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு சிறப்பான முயற்சி எடுத்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக முகாம்கள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.  மாநில அரசின் மறுவாழ்வு பணிக்கு நாங்கள் துணையாக இருப்போம்.  எங்கள் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெறும்.  ஆய்வின் அறிக்கையை வரும் வாரத்தில் சமர்ப்பிப்போம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இக்குழுவினர் 3 குழுக்களாக பிரிந்து ஒரு குழு பூதம்பாடிக்கும், ஒரு குழு மருவாய்க்கும், ஒரு குழு கல்குணத்திற்கும் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago