முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க தேச மசூதியை நாங்கள்தான் தாக்கினோம் : ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

டாக்கா - வங்க தேசத்தில் உள்ள சியா மசூதியில் நாங்கள்தான் தாக்கினோம். அந்த தாக்குதலில் ஒருவர் இறந்தார் என்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கூறியது. உலக நாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் தரும் பெரும் தீவிரவாத சக்தியாக ஐ.எஸ் தீவிரவாதிகள் உருவெடுத்து வருகிறார்கள். அவர்கள் தற்போது சிரியாவிலும்,ஈராக்கிலும் அரசு படைகளுக்கு எதிராக கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இருநாடுகளில் மக்களை கொன்று வந்த இந்த அமைப்பு கடந்த 13ம் தேதியன்று  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்திய கொடூர  தாக்குதலில் 130 அப்பாவி மக்கள்  கொல்லப்பட்டனர்.  இந்த தீவிரவாதிகள் தற்போது வங்க தேசத்திலும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால்  மேற் கத்திய நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் முனைந்துள்ளனர் . சிரியாவில் முகாமிட்டு இருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒட்டு மொத்த மாக அழிப்பதற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் படைகள் வான் வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலில் நாமும் ஈடுபட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தனது நாட்டுஎம்பிக்களிடம் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் வங்க தேசத்தில் உள்ள சியா பிரிவு மசூதியில் வியாழக்கிழமை இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அந்த தாக்குதலில் மசூதியில் மக்களை தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் 70வயது நபர் கொல்லப்பட்டார். மேலும் 3பேர் காயம் அடைந்தனர்.  இரவு பிரார்த்தனை நடந்த போது துப்பாக்கி ஏந்திய 3 தீவிரவாதிகள் தொழுகை நடத்தியவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்கள். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத மக்கள் பெரும் பீதியுடன் வெளியே ஓடினர்.  இந்த தாக்குதல் வங்க தேசத்தின் போக்ரா மாவட்டத்தில் உள்ள சியா மசூதியில் நடந்துள்ளது.

துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள் பின்னர் அந்த இடத்தினை விட்டு தப்பி ஓடினர். வங்க தேச தலைநகர் டாக்காவில் அதிகாலை நேரத்தில் சியா பகுதி மக்கள் மத்தியில் ஒரு குண்டு வெடித்தது.இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 80பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னர் தற்போது போக்ரா மாவட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்  நடத்தி இருக்கிறார்கள் கடந்த அக் டோபர் மாதம் 24ம் தேதியன்று ஜமாதுல் முஜாகிதீன் வங்கதேச தீவிர வாத அமைப்பினர் தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர் . வங்க தேசத்தில் சமீப காலமாக தொடர்ந்து பல தாக்குதல்கள் நடந்து வருகின்றன- இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அந்த தீவிரவாத அமைப்பு வங்கதேசத்தில் இல்லை. உள்ளூர் தீவிரவாத அமைப்புகளே தாக்குதல் நடத்தி வருகின்றன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்