முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து குவித்த வழக்கு: இமாச்சல முதல்வருக்கு அமலாக்கத் துறை சம்மன்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.  மத்திய உருக்கு துறை அமைச்சராக வீரபத்ர சிங் பதவி வகித்த காலத்தில் ரூ.6.1 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.  கடந்த 2009-ம் ஆண்டு ரூ.6.1 கோடியை எல்ஐசி முகவர் சவுஹான் உதவியுடன் ஆயுள் காப்பீட்டில் அவர் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. வேளாண் தொழில் மூலம் இந்த பணம் கிடைத்ததாக வீரபத்ர சிங் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்திருந்தார்.

எனினும் வருமான வரித் தாக்கலில் அந்த பணம் தொடர்பான விவரங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சவுஹான், அவரது சகோதரர் சி.எல்.சவுஹான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இதன் அடிப்படையில் வீரபத்ர சிங் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையும் கடந்த வாரம் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.   இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு நேற்று அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நேரில் ஆஜராக முடியாவிட்டால், அவர் சார்பில் சட்ட பிரதிநிதிகளோ அல்லது அவர் அங்கீகரித்த நபரோ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம். மேலும், விசாரணைக்கு தேவையான ஆவணங்களையும் சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் வீரபத்ர சிங் நேரில் ஆஜராகும்பட்சத்தில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யவும் தயாராகி வருகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago