முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு:அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை - மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பாசன நிலங்களின் பயிர் சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை ஓ.பன்னீர்செல்வம் ,  அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் திறந்து வைத்தனர். முதல்வ ஜெயலலிதா  உத்தரவின்படி, வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசன நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதற்காக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன், ஆகியோர் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். அமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் தெரிவிக்கையில்,  ஜெயலலிதா  தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் ஒரு போக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில் இரண்டாவது போகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வந்த கோரிக்கையினை ஏற்று, தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பெரியாறு பாசனப் பரப்பாகிய 45,041 ஏக்கர் நிலங்களுக்கு இரண்டாம் போகத்திற்கும், ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பகுதியான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தம் 1,50,043 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதமும், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கு 3,000 மி.கனஅடி தண்ணீரை, வைகை பழைய பாசனப் பகுதி 3-ற்கு 67,837 ஏக்கர் நிலங்களுக்கு 8 நாட்களுக்கும், 575 மி.கனஅடி தண்ணீரை, பாசனப் பகுதி 2-ற்கு 40,743 ஏக்கர் நிலங்களுக்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும்,  இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 2,59,663 ஏக்கர் நிலஙகள் பாசன வசதி பெறும். எனவே, வைகை பழைய பாசன நிலங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமக்கள் குறுகியகால பயிர்களை நடவு செய்து  நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு மண்புமிகு நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்  தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மாண்புமிகு மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.லாசர், பி.வி.கதிரவன், எம்.வி.கருப்பையா, எம்.முத்துராமலிங்கம், கே.தமிழரசன், முதன்மை பொறியாளர் வள்ளியப்பன்;, கண்காணிப்பு பொறியாளர் முருகசுப்பிரமணியன்;, செயற்பொறியாளர் முத்துப்பாண்டி, உதவி செயற்பொறியாளர் அன்புசெழியன்;, உதவி பொறியாளர்கள் குபேந்திரன், ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்