முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: அமெரிக்கா மீது புடீன் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - துருக்கி ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மீது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் குற்றம் சாற்றியுள்ளார். ரஷ்ய போர் விமானம் துருக்கியில், சிரியாவின் எல்லைப் பகுதியில் பறந்தபோது, கடந்த 24 ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி ரஷ்யா மற்றும் சிரியாவின் பாதுகாப்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டார். ரஷ்ய போர் விமானம் தங்களது வான் எல்லையில் பறந்தால், 10 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு சுட்டு வீழ்த்தியதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. ஆனால், துருக்கி ராணுவம் எச்சரிக்கை எதுவும் செய்யவில்லை என்று உயிர் தப்பிய ரஷ்ய விமானி கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்குச் சென்ற பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலன்டே, ரஷிய அதிபர் புடீனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை மேற் கொண்டுள்ள நேட்டோ படைகள் அமெரிக்கா தலைமையில் இயங்குகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ரஷியாவும் தாக்குதல் நடத்தி வருகின்றது. எங்களது போர் விமானம் பறக்கும் வழித் தடத்தை அமெரிக்காவிடம் நம்பிக்கையுடன் தெரிவித்திந்தோம். அந்த ரகசியத்தை தனது நட்பு நாடான துருக்கியிடம் அமெரிக்கா தெரிவித்து விட்டது. அதை வைத்து துருக்கி, எங்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்