முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது சொந்த விவாகாரங்களில் தலையிட வேண்டாம் : பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சானியா காட்டம்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - எனது சொந்த விவாகாரங்களில் தலையிட வேண்டாம் என்று டெல்லியில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா காட்டத்துடன் தெரிவித்தார். மண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக கேள்வி கேட்ட நிருபர்களை எனது படுக்கையறையில் எட்டிப் பார்க்கவோ, அதைப்பற்றிக் கேட்கவோ உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வார்த்தைகளால் விளாசி தள்ளியுள்ளார.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சானியா மிர்சா, இந்த உலகில் ஆணாதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும், பெண் ஒருவர் சாதிப்பது என்பது கடினமான விசயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,  நாம் ஆண்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். சில சமயம் பெண்கள் அவர்களின் தேவைக்காக கடினமாக போராட வேண்டி இருக்கிறது. பொதுவாக ஆண், பெண்களுக்கு ஒரே விதமான பரிசு தொகை வழங்கப்பட்டது. ஆனால் அது இந்தியாவில் நடப்பதாக தெரியவில்லை.

ஒரு பெண் தனது மனதில் படும் விசயங்களை பேசும் போது அவள் வேறுவிதமாக பார்க்கப்படுகின்றார். அதே சமயம் ஒரு ஆண் தனது மனதில் படுவதை வெளிப்படையாக தெரிவித்தால் அவர் லட்சியவாதியாக பார்க்கப்படுகிறார் என்றார். இதற்கிடையில் சானியாவின் குடும்ப வாழ்க்கை தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர். 

இதனால் கோபமடைந்த சானியா மிர்சா, குழந்தைகள் இருப்பவர்கள் இது போன்று ஒருவரிடம் கேட்பது மிகவும் அவமானமான ஒன்று. நான் பொதுவான ஒருவராக இருப்பதால் இது போன்று நடக்கிறது. ஆனால் யார் ஒருவருக்கும் எனது படுக்கையறையில் நடப்பது பற்றி கேட்கும் அதிகாரத்தை நான் கொடுத்துவிடவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்