முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் உள்ள 37மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, இலங்கை சிறையில் உள்ள 37 மீனவர்களையும் 55 மீன் பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இலங்கை சிறையில் தற்போது37 தமிழக மீனவர்கள் வாடுகிறார்கள். அவர்களையும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 55 மீன் பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடடிவடிக் கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்கள் பாக்ஜல சந்தியில் மீன் பிடித்து தங்களது பாரம்பரிய வாழ்வாதாரத்தை மேற் கொண்டு வருகிறார்கள்.

அவர்களை தொடந்து கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்யும் போக் கையும் இலங்கை கடற்படை மேற் கொண்டு வருகிறது. ராம நாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்தும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் பகுதியில் இருந்தும் 8 மீனவர்கள்  மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை நேற்று  அதிகாலை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களது 2 எந்திர மீன் பிடி படகுகளையும் கைப்பற்றி உள்ளது.அந்த மீனவர்கள் தற்போது இலங்கையின் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 1974 மற்றும்  76ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. சர்வ தேச நீர் எல்லை பகுதி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்த ஒப்பந்தங்களை தொடர்ந்து கச்ச தீவை இலங்கை அரசிடம்இந்தியா தாரை வார்த்துள்ளது. இந்த ஒப்பதங்களை  எதிர்த்து நான் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வழக்கில்  தமிழக அரசு தன்னையும் ஒரு நபராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.இதனால் தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் மீன் படிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் பாக் ஜல சந்தியில் தங்களது பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை பெற்றுள்ளனர்.ஆனால்  அவர்களை அங்கு இலங்கை கடற்படை கைது செய்யும் போக்குதொடர்ந்து நடந்து வருகிறது . தமிழக மீனவர்களையும் படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக் கையை முடிவுக்கு கொண்டு வர இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்.

தமிழக மீனவர்கள் படும் துயரங்களை உணர்ந்து எனது அரசு பல்வேறு திட்டகங்களை கொண்டு வருகிறது ஆழ்  கடல் பகுதியில்  தமிழக மீனவர்கள் பிடிக்க உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக புதிய ஆழ் கடல் பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் மீன் பிடி படகுகளை வாங்குவதற்கு எனது அரசு ரூ 30லட்சம் மானியத்தை மேற் கொள்கிறது.  171 மீன் பிடி படகுகள் தற்போது கட்டப்படுகிறது. இதன் மூலம் 581 தமிழக மீனவர்கள் பயன் அடைவார்கள்.ஆழ் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு ரூ1520 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும். என்றும் அந்த கட்டமைப்பை பராமரிக்க வருடந்தோறும் ரூ10கோடியை அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசிடம் எனது தமிழக அரசு கருத்துரு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்யும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதே இல்லை.இதனால்  மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் மீன் பிடிக்கும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரைந்து நடவடிக் கை எடுத்து தீர்வு காண வேண்டும்.இந்த  பிரச்சினையை தடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை நிர்வாகத்திடம் கொண்டு செல்ல வேண்டும். இதுவரைஇலங்கை கடற்படையினர் 37 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க நீங்கள் நேரடியாக தலையிட்டுநடவடிக் கை எடுக்க வேண்டும்.பறிமுதல்செய்யப்பட்ட 55 மீன் பிடி படகுகளையும் விடுவிக்க  விரைவான நடவடிக் கையை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும்.

கடந்த 8-11-15 அன்று தங்களது எந்திர மீன் பிடி படகு பழுதடைந்ததால் 4 தமிழக மீனவர்களும் அவர்களது படகும் இலங்கையில் பரிதவித்து இருக்கிறார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக் கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago