முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவ நிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது: மோடி

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

பதுடெல்லி, பருவ நிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று முதல் (திங்கட்கிகழமை) பருவ நிலை மாற்ற மாநாடு துவங்க உள்ள நிலையில் பரு நிலை மாற்றத்தை எதிர்த்து போராடும்  பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி மாதம் தோறும் மனதில் இருந்து பேசுகிறேன் (மான் கி பாத்)என்ற நிகழ்ச்சியில் வானொலியில்  நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ஒலி பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நேற்று அவர் உரையாற்றியதாவது

உலக வெப்ப மயமதாலால் பூமியின்  வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. பசுங்கூட வாயுக்கள் அதிகரிப்பால் இந்த வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப நிலையை கட்டுப்படுத்த நம்அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. பருவ நிலை மாற்றத்தால் எதிர்பாராத இயற்கை பேரிடர்களாக பெரு வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளமும் பருவ நிலை மாற்றம் காரணமாக நிகழ்ந்துள்ளது. மக்கள் எரிசக்தி பாதுகாப்பை கடை பிடிக்க வேண்டும். இதனால்  அனைவரும் இயற்கை சக்தியான சூரிய சக்தியை பயன்படுத்துவதை மேற் கொள்ள வேண்டும்.பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த சார்க் நாடுகளில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.இது தொடர்பாக டெல்லியில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இது நல்ல துவக்கம் ஆகும். உலகின் எல்லா பகுதிகளிலும்  இயற்கை பேரிடர் நிகழ்வுகள் ஏற்படும் செய்தியை நாம் கேட்டு வருகிறோம்.அந்த இழப்புகள் நாம் எப்போதும் கேள்விப்படாத வகையில் அதிக அளவில் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டு வரும் விளைவுகளை நாம் உணரத்தொடங்கியுள்ளோம்.

நமது நாட்டில் தமிழகத்தில் கன மழை பெய்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த மாநிலம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இதர மாநிலங்களிலும் இதேப்போன்ற நிலை ஏற்படுகிறது. பல மக்கள் இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்து இருக்கிறார்கள். உயிரிழந்த அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.

பருவ நிலை மாற்றம் காரணமாக உலகமே கவலை அடைந்துள்ளது. இது தொடர்பாக எல்லா பகுதிகளிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பூமியின் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கக்கூடாது. இந்த பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு வளரும் நாடுகளின் கையில் உள்ளது. வளரும் நாடுகள் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. குறைந்த செலவின தொழில் நுட்பமும் தேவைப்படுகிறது.

உலகம் மாசுப்பட்டதற்கு வளர்ந்த நாடுகள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

இவ்வாறு பிரதமர் தனது 20நிமிட வானொலி நிகழ்ச்சியில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்