முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க பத்திர திட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்ட நிதித்துறை அமைச்சகம் நாளை ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மத்திய அரசு  கொண்டு வந்துள்ள தங்க பத்திர திட்டத்தில் மக்கள் முதலீடு செய்வது குறைவாக உள்ளது. இந்த திட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் சேர நிதித்துறை அமைச்சகம் டிசம்பர் 1ம் தேதியன்று இந்திய வங்கிகள் மற்றும் மற்றும் ரிசர்வ் வங்கி தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறது.

தங்க பத்திர திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு(என்..டி.ஏ)  கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் மக்கள் முதலீடு செய்யும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த திட்டத்தில்மக்கள் ஆர்வத்துடன் அதிகஅளவில் முதலீடு செய்வது தொடர்பாக நிதித்துறை அமைச்சகம் வருகிற 1ம் தேதியன்று  ஆய்வு கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் இந்திய வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு பொருளாதாரத்துதுறை செயலாளர் சசிகாந்தா தாஸ் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர் கான் கலந்துகொள்கிறார். தங்க பத்திர திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கு தங்க நகை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இந்திய கோவில் அமைப்புகளிடம் வங்கிகள் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இதுதொடர்பாக இந்த திட்டத்தில் மக்கள் அதிக ஆர்வம் காட்ட  பொருளாதாரத்துறை வங்கிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்துகிறது.

இந்தியாவில்  ரூ52லட்சம் கோடி மதிப்பிலான 20ஆயிரம் டன் தங்கம் வீடுகளிலும் நிறுவனங்களிலும் பயன்படுத்தாமல் கிடக்கிறது. தங்க இறக்குமதியில் அயல் நாடுகளை சாராமல் இருப்பதற்கு  இந்த தங்க பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆன போதும் இந்த திட்டத்தில் நவம்பர் 18ம் தேதி வரை 400கிராம் தங்கம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. தங்க பத்திர திட்டத்தில் அதிக முதலீடு செய்வதற்கு தங்க நகை நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்