முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3வது டெஸ்ட்டில் நியூசிலாந்தை வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

அடிலைடு(ஆஸ்திரேலியா) ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் 3வது இறுதி டெஸ்ட்டில் நியூசிலாந்து கிரிக் கெட் அணி 2வது இன்னிங்சில் 208ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது இதனை தொடர்ந்து 187ரன் அடித்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 3விக்கெட் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட்டைவெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையே 3 டெஸ்ட்  கொண்ட கிரிக் கெட் தொடர் நடைபெற்றது. இந்த அணிகள் இடையே யான 3வது இறுதி டெஸ்ட் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைடு நகரில் நடந்தது..இது பகல்-இரவு போட்டி ஆகும்.
 இந்த போட்டியில் நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 208ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசல் வுட் 24.5ஓவர்களில் 6விக் கெட்டுகளை கைப்பற்றினார். அவர் இந்த விக் கெட்டுகளை கைப்பற்ற 70ரன் மட்டுமே தந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அது இந்த டெஸ்ட் தொடரை 2-0 ஆட்ட கணக்கில் கைப்பற்றும்என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி  3விக் கெட் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட்டினை கைப்பற்றியது. இதன் மூலம் பகல்-இரவு டெஸ்ட்டை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையையும் அந்த அணி பெற்றது.
கடந்த 2013ம்ஆண்டு முதல் நியூசிலாந்து அணி 8டெஸ்ட்தொடர்களை   ஆடி இருந்தது.இந்த தொடருக்கு முன்னர்  நடந்த டெஸ்ட் தொடரைநியூசிலாந்து இழக்காமல் இருந்தது. நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் மோதிய டெஸ்ட் தொடரை தற்போது இழந்துள்ளதால் அதன் சாதனை முடிந்துள்ளது..

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 202ரன்னும் ஆஸ்திரேலிய அணி 224ரன்னும் எடுத்து இருந்தன. 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 208ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. மிட்சல் சன்டர் 45ரன்னும் ராஸ் டைலர் 32ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் 70ரன்னுக்கு 60விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்ச் மார்ஷ் 59ரன்னுக்கு 3விக் கெட்டுகளை சரித்தார்.

இதனைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 7விக் கெட் இழப்புக்கு 187ரன்களை எடுத்து டெஸ்ட்டை வென்று தொடரையும் 2-0ஆட்ட கணக்கில் கைப்பற்றியது. ஷான் மார்ஷ் 49ரன், டேவிட் வார்னர் 35ரன்,எடுத்தனர்.. நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 60ரன்னுக்கு விக் கெட்டுகளை கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago