முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மேம்படபேச்சு வார்த்தை முன்னோக்கி செல்ல வேண்டும்: ஐ.நா.பொதுச் செயலாளர்

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

ஐ.நா சபை, இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உறவு முன்னோக்கிச் செல்வதற்கு இரு நாடுகள் இடையேபேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தினார்.

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் செய்தி  நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்தியா பாகிஸ்தான் இடையே உறவு மேம்படுவதற்கு பேச்சு வார்த்தைதான் பிரதானமாகும். தீவிர வாதம் உலக நாடுகளின் அமைதி சீர் குலைப்பதாக உள்ளது. உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவ வேண்டும். ஐநா பொது ச்சபை கூட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4அம்ச அமைதி நடவடிக் கை கருத்துருவை தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் தீவிரவாத்தை ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 இரு நாடுகளின் தலைவர்கள் அமைதி பேச்சு வார்த்தையை தொடர்வதற்கு கருத்துரு அளித்திருப்பதை நான் நன்கு அறிவேன். அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் ஐநா பொதுக்குழு கூட்ட விவாதத்தின் போது இந்த இரு நாடுகள் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு கருத்துருக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

லெபனான் ,பாரிஸ் போன்ற இடங்களில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதல்களை நடத்தி அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஐநா உறுப்பினர் நாடுகள் ஒன்று பட்டு இந்த பிரச்சினையை அழிக்க வேண்டும்.

தீவிரவாத தாக்குதல்களால் பாகிஸ் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அந்த நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்துள்ளனர். அந்த நாட்டின் நிர்வாகம் தீவிரவாதத்தை எதிர்த்து போராட  தங்களது மண்ணில் நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்