முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் டிரா

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      இந்தியா

சத்தீஸ்கர்: உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளும் பி பிரிவில் ஆலந்து, ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்திய அணி 2வது ஆட்டத்தில் ஜெர்மனியுடன் நேற்றுமுன்தினம் மோதியது.  4வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லஸ் வெல்லன், இந்திய வீரர்களின் தடுப்புகளை மீறி இலக்கின் அருகே சென்று கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது. 2வது மற்றும் 3வது பாதியிலும் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் கடைசி பாதியில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago