முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயதாரணிக்கு நக்மா கண்டனம்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி மோதல் கட்சி மேலிடத்தை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து வருகிறார்.

நேற்று முன்தீனம் தமிழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரை போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.விஜயதாரணியும் டெல்லி சென்று ஷோபாவை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினார்.கட்சி மேலிடத்தை பொறுத்தவரை கட்சி அலுவலகத்தில் நடந்த பிரச்சினையை கட்சிக்குள்தான் பேசி தீர்த்து இருக்க வேண்டும். அதற்காக போலீஸ் நிலையம் சென்று புகார் செய்திருக்க வேண்டியதில்லை என்று கருதுவதாக கூறப்படுகிறது.அதை உறுதிப்படுத்தும் வகையில் விஜயதாரணியின் செயலுக்கு நடிகை நக்மா கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரான நக்மா தமிழக பொறுப்பாளராகவும் உள்ளார்.

இதுபற்றி நக்மா கூறியதாவது:–

காங்கிரஸ் மிகப்பெரிய ஜனநாயக கட்சி. இந்த கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். சின்ன சின்ன பிரச்சினைகள் கட்சிக்குள் ஏற்படுவது வழக்கமானதுதான். அதை கட்சிக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிக சாதாரணமானது. போலீசில் புகார் ஆவதற்கு முன்பு வரை இந்த பிரச்சினை டெல்லிக்கு கூட வர வேண்டிய இல்லை.ஆனாமுன்தீனம்ல் தேவையில்லாமல் போலீசில் புகார் செய்ததால் பிரச்சினை பெரிதாகி விட்டது. தற்போது டெல்லி மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்துக்கு பொறுப்பாளர் என்ற முறையில் நானும் விசாரித்து அறிக்கை கொடுப்பேன்.இந்த விஷயத்தில் டெல்லி மேலிடம் கடுமையாக உள்ளது. நிச்சயமாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்