முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்பகிர்மான பெட்டிகள் மாற்றம்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - கடும் மழையைத்தொடர்ந்து 334 மின் பகிர்மான பெட்டிகள், 106 கிலோ மீட்டருக்கு புதிய மின்கம்பிகள்அமைத்து மின்வாரியம் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து மின்பகிர்மானக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. அப்பகுதிகளில் சீரான மின்விநியோகம் கிடைக்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மின் பகிர்மான பெட்டிகளை உயர்த்தும் பணிகள் துரிதமாக நடைபெற்றன.

அதன் அடிப்படையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் நந்தம்பாக்கம் மைலாப்பூர், தியாகராயநகர், அபிராமபுரம், சாந்தோம், பெரம்பூர், எக்மோர், அண்ணாநகர், புளியந்தோப்பு வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, போன்ற பகுதிகளில் 334 மின்பகிர்மான பெட்டிகள் தடைமட்டத்தில் இருந்து 3அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், மாதவரம், பெரியார்நகர், ஸ்ரீதேவி நகர், வேளச்சேரி, இராமகிருஷ்ணா நகர், பள்ளிக்கரணை, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் 106 கிலோ மீட்டருக்கு புதிய மின்கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டன. மேலும் திருச்சி, வேலூர் , விழுப்புரம், திருநெல்வேலி, மண்டலங்களில், தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து போர்க்கால அடிப்படையில் மின்கம்பிகளை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்