முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் 58 காசும் - டீசல் 25 காசும் விலை குறைப்பு

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் குறைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. உள்ளூர் வரிவிதிப்புகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைப்பர்.ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆகிய தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது .

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் குறைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த முறை டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா அதிகரிக்கப்பட்டது; பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்