முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்தி சிதம்பரத்தின் வீடு - நிறுவனங்களில் அமலாக்கத்துறை - வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர்.மேலும் கார்த்தி சிதம்பரத்துடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் உடையவர்களின் அலுவலகங்களில் சோதனை நடைப்பெற்றது. 

கார்த்தி சிதம்பரத்துடன் வர்த்தகக் கூட்டாளிகளாக இருந்து வரும் நிறுவனத்தைச் சேர்ந்த 3 வளாகங்கள் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வாசன் ஐ கேர், அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங் நிறுவனங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை என இரண்டு துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு சந்தேகம் காரணமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும், அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவினர் சோதனைகளை மேற்கொண்டதாகவும் அதிகாரி ஒருவர் பிடிஐ- செய்தி நிறுவத்திடம் தெரிவித்தார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டதாக தெரிகிறது. கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனம் மூலமாக ஏர்செல் நிறுவனத்திற்கு பண பரிமாற்றம் நடந்ததாக சொல்லப்படுகிறது, குறிப்பாக 2006-ம் ஆண்டில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெய்டுக்கான காரணம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவிக்கையில்.,

அரசு மோத வேண்டுமானால் என்னிடம் நேரடியாக மோதட்டும், அரசியலில் தொடர்பில்லாத எனது மகன்களை தொல்லை செய்ய வேண்டாம். இந்த அரசு என்னை இலக்காக கொண்டிருந்தால், அதை அவர்கள் நேரடியாக செய்யட்டும். அதைவிட்டு எநது மகனின் நண்பர்களுக்கு தொல்லை தர வேண்டாம். அவர்களுக்கு அரசியலில் எந்த தொடர்பும் கிடையாது. என்மீதும், எனது குடும்பம் மீதும் மத்திய அரசு சேற்றை வாரி இறைக்கிறது. அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் குடும்ப நிறுவனங்கள் சட்டப்படி இயங்கிவருகின்றன. தேவையில்லாமல் எனது குடும்பத்தையும், நிறுவனங்களையும், வழக்குகளில் இழுத்துவிடுவதை கண்டிக்கிறேன்.

அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரால், வருவாய் துறையில் அவருக்கு இருக்கும் பகையை தீர்த்துக்கொள்ள இந்த ரெய்டு நடந்துள்ளது. மத்திய அரசின் விருப்பத்தை அந்த அதிகாரி தனது தனிப்பட்ட ஆசையோடு நிறைவேற்றுகிறார். நான் அமைச்சராக இருந்தபோது, சட்டத்திற்கு விரோதமாக உதவி செய்ய கேட்டார். நான் மறுத்ததால் அந்த அதிகாரி ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி பழிவாங்குகிறார் இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago