முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை 140 அடி நீர்மட்டத்தை நெருங்கிய பெரியாறு அணை

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

கம்பம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓய்ந்த நிலையில் தற்போது புதிய புயல் சின்னம் காரணமாக விடிய விடிய மழை பெய்தது. எனவே அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது 2555 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 139.50 அடியாக உள்ளது. அணையிலிருந்து 511 கன அடி நீர் மட்டும் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 66.47 அடியாக உள்ளது. அணைக்கு 2266 கன நீர் வருகிறு. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டம் முதல் போக சாகுபடிக்கு 3500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 198 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 63 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. பெரியாறு அணையில் 1 மி.மீ மழையும், தேக்கடியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்