முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் சரக்கு வரி மசோதா நிறைவேற பகுஜன் சமாஜ் ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி)உள்பட முக்கிய சீரமைப்பு நடவடிக் கைகளை மேற் கொள்வதற்கு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இருப்பினும் சகிப்பின்மை நாட்டில் அதிகரித்து வருவதாகவும் சர்ச்சசைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மத்திய அமைச்சர்கள் குறித்தும் பாஜக கடும் விமர்சனத்தை பாராளுமன்றத்தில் எதிர் கொண்டது.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு கடமை குறித்த விவாதம் நேற்று நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட திரிணா முல் காங்கிரஸ் கட்சியின்  உறுப்பினர் டெரிக் ஓ பிரையன்  நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்ற இடையூ று விவகாரம் தொடர்பாக ஜெட்லியை கவுபாய் அரசியலமைப்பு  என்று விமர்சித்தார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ள மக்களவையை பொது மக்களால் தேர்வு செய்யப்படாத மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று ஜெட்லி கூறியதாக தகவல் வெளியானது. இந்த கருத்துக்கு  ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தான் அவ்வாறு கூறவில்லை என்று ஜெட்லி மறுப்பு தெரிவித்தார். மாநிலங்களவையில் பாஜகவிற்கு போதிய உறுப்பினர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை நீக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த மசோதா கோப்புகள் விவரம் குறித்தும் ஜி.எஸ்.டி மசோதாவில் உள்ள 3 ஆட்சேபனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் மத்திய அரசு சில மாற்றங்களுடன் பாராளுமன்றத்திற்கு வந்தது. உதாரணமாக  குறை தீர்ப்பு நடைமுறையை ஏற்படுத்தி அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை பதவியமர்த்த வேண்டும். இதன் மூலம் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வரி வருவாய்களை பகிரிந்து கொள்வதில் உள்ள பிரச்சினைக்கு  தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் கருத்து தெரிவித்து இருந்தது. ஜி.எஸ்.டி கவுன்சிலை அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடை முறை மேற் கொள்ள வேண்டும் என்று  கூறப்பட்டது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் கொண்டு வந்த இந்த குறிப்புகள் குறித்து விவாதிப்போம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது.மேலும் ஒரு சதவீத செஸ்வரியை உற்பத்தி மாநிலங்களில் விதிக்க வேண்டும். இதனைத்தவிர வரி விகிதம் 18 சதவீதத்திற்கு மேலாக செல்லக்கூடாது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  அமெரிக்காவில் இருந்து திரும்பியதும்  விவாதிப்பதற்கு மத்திய அரசு காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுஅரசு வார்த்தை நடத்த உள்ளது .இந்த பேச்சு வார்த்தையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு மற்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு சார்பில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, குலாம் நபி ஆசாத் ஆனந்த் சர்மா மற்றும் ஜோதிர் சிந்தியா ஆதித்யா ஆகியோர் உள்ளனர்.

பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாஇடையே நடந்த சந்திப்பு நாடு முழுவதும் வரவேற்கப்பட்டுள்ளது. இதன் மக்கள் கூட்டுறவு ஜனநாயகத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்று வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.முரண்பட்ட அரசியலை மக்கள் விரும்பவில்லை.சட்டம் நிறைவேறுவதற்கு அரசால்  எந்த ஒரு நல்ல பணி மேற்கொள்ளப்பட்டாலும் அதன் பெருமை ஆட்சியாளர்களுக்கும் எதிர் கட்சியினயரையுமே சேரும் என்று வெங்கய்யா நாயுடு மேலும் தெரிவித்தார்.அவர் ஜி.எஸ்.டி மசோதா குறித்து இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கவுபாய் அரசியலமைப்பை மேற் கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஓ பிரையன்  குற்றம் சாட்டினார். சுதந்திர போராட்ட பங்கேற்பு குறித்து  இடது சாரிகளுக்கு கேள்வி  கேட்கும் உரிமை இல்லை என்றார். அப்போது பிரையனுக்கும் இடது சாரி எம்பிக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்து ராஷ்ட்டிர விவகாரம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி ,கே.சி தியாகி பாஜகவை விமர்சித்தார்.

அரசியலிலும் , அரசியலமைப்பு பதவிகளில் முஸ்லீம் கள் குறைந்த அளவே உள்ளனர் என அவர் குறிப்பிட்டதுடன் சில பாஜக தலைவர்கள் பாகிஸ்தான் குறித்த விமர்சனம் குறித்தும் அவர் பாஜகவை விமர்சித்தார். இந்தியா, பாகிஸ்தான் பிரிந்தபோது  சில முஸ்லீம்கள் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் செல்லவில்லை. பிரிவினையின் போது அந்த முஸ்லீம்கள் பாகிஸ்தான் செல்வதற்கும் வாய்ப்பு இருந்தது என பாஜக தலைவர்கள் கூறிய கருத்தை தியாகி எதிர்த்தார். ஜி.எஸ்.டி மசோதா, இன்சூரன்ஸ் மசோதா(அன்னிய நேரடி முதலீட்டை 26சதவீதம் முதல் 49சதவீதம் வரை அதிகரித்தல்) ஆகியவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம். 

நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்களிலும் முழுமையாக ஆதரிக் கிறோம். ஆனால் நீங்கள் 5-6 அமைச்சர்களை  அரசியலமைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க கூற வேண்டும் என தியாகி தெரிவித்தார்.காங்கிரசுக்கு எதிராக நீங்கள் போராட லாம் அதற்காக மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி விட்டு சென்ற பாரம்பரியத்தை சீர் குலைக்கக்கூடாது என்றும் பாஜகவினரை அவர் விமர்சித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்