முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் படேல் மீதான வழக்கில் சில பிரிவுகள் ரத்து: குஜராத் ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் - இடஒதுக்கீடு கோரி போராடிய குஜராத் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீதான தேச துரோக வழக்கில் சில பிரிவுகளை ரத்து செய்து குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் வேறு சில வழக்குகளில் அவரை கைது செய்ய தடையும் விதித்துள்ளது. இடஒதுக்கீடு கோரி போராடிய குஜராத் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேலின் நடவடிக்கைகளை அரசுக்கு எதிரான போராக கருதக் கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குஜராத் அரசு தேச துரோக வழக்கில் ஹர்திக் படேலை கைது செய்தது.

இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேலும் அவரது ஆதரவாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்திவாலா, ஹர்திக் படேலின் நடவடிக்கைகளை அரசுக்கு எதிரான போராக கருத வேண்டியதில்லை எனக் கூறினார்.மேலும் ஹர்திக் உள்ளிட்டோர் மீது இதற்காக போடப்பட்ட ஐ.பி.சி. 121 மற்றும் இருபிரிவினரிடையே மோதலைத் தூண்டியதாக போடப்பட்ட 153-A, தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயலுக்கான 153B ஆகிய பிரிவுகளையும் அவர் ரத்து செய்தார்.

இருப்பினும் ஹர்திக் மீது போடப்பட்ட தேசதுரோகம் தொடர்பான பிரிவான 124, அரசுக்கு எதிரான போருக்கான சதியில் ஈடுபட்டதற்கான 121-A ஆகிய பிரிவுகளை ரத்து செய்யவும் நீதிபதி மறுத்துவிட்டார். இந்த பிரிவுகளின் கீழான வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.அத்துடன் வேறு வழக்குகளில் ஹர்திக் படேலை கைது செய்ய 15 நாட்களுக்கு இடைக்கால தடையையும் குஜராத் உயர்நீதிமன்றம் விதித்தது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்