முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 6 அணு ஈனுலைகளை அமைக்க இந்தியா திட்டம்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      இந்தியா
Image Unavailable

ஹைதராபாத்: அடுத்த 15ஆண்டுகளில் இந்தியா மேலும் 6அதிவேக அதிவேக ஈனுலைகளை  அமைக்க அணு சக்தி துறையின் செயல்பாட்டு அமைப்பான பகவினி  திட்டமிட்டுள்ளது என்று மூத்த அதிகாரி  தெரிவித்தார். நாட்டின் முதல் 500 மெகாவாட் புரோட்டோ டைப் அதிவேக ஈனுலையை சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் பகவினி அமைக்கிறது. சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தில் அமைக்கப்படும் இந்த ஈனுலை வருகிற 2016ம் ஆண்டு மார்ச் அல்லது  ஏப்ரல் மாதத்தில் இயங்கத்துவங்கும் என்று பாரதிய நகபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (பகவினி) அமைப்பின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பி.செல்லப்பாண்டி தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் சர்வதேச மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் இடையே பகவினி நிறுவன தலைவர் செல்லப்பாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கல்பாக்கத்தில் 600மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அரசின் அனுமதியை எதிர் நோக்கியுள்ளோம். உத்தேசிக்கப்பட்ட இந்த அணு உலைகளைகளுடன் அதிக மின் சார உற்பத்தி திறன் கொண்ட ஈனுலைகளை அதே செலவினத்தில் அமைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.

இந்த இரு ஈனுலைகளை தவிர மேலும் 4 அணு உலைகளை புதிதாக கட்டுவதற்கு இடங்களை அடையாளம் காண வேண்டியுள்ளது.2030ம் ஆண்டு கால கட்டத்திற்குள் மேலும் 4 ஈனுலைகளை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.அதி வேக ஈனுலைகளுக்கு எம்.ஓ.எக்ஸ் எரி பொருள் பயன்படுகிறது. இந்த எரிபொருளில் புளுட்டோனியமும் யுரேனியம் ஆக் சைடும் உள்ளன.
அணு உலையில்  உண்மையான எரி பொருள் பண்டில்களுக்கு பதிலாக சில புதிய எரிபொருள் பண்டிலை பயன்படுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago