முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்வதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பிரதமர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் மீண்டும் பெய்து வரும் இடைவிடாது மழை குறித்து பிரதமர் தனது கவலையை தெரிவித்தார்.  தமிழகத்தில் மழை ஓய்ந்த சில நாள்களுக்குள் 2-வது முறையாக மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி முதல்வருடன் தொலைபேசியில் பேசினார்.  அப்போது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தமிழகத்திற்கு மழை வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பி வைத்ததற்காக அவர் பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிலவும் தற்போதைய நிலவரம் குறித்து கவலை தெரிவித்த பிரதமருக்கு முதல்வர் தனது நன்றியை தெரிவித்தார். அதேநேரம் மாநில அரசு வரலாறு காணாத வகையில் பெய்து வரும் மழையால் ஏற்ப்பட்டுள்ள சவால்களை சமாளிக்க மாநில அரசு தனது எந்திரத்தை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளதையும் பிரதமரிடம் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழைப் பொழிவை தமிழகம் சந்தித்திருப்பதையும் முதல்வர் சுட்டிக் காட்டினார். தமிழகத்தின் வடமாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் பிரதமரிடம் முதல்வர் விளக்கிக்கூறினார். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதை பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கூறினார். மேலும் மாநில அரசு, மாநில பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படையினர், கடலோர பாதுகாப்பு படையினரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளதையும் முதல்வர் எடுத்துரைத்தார். மேலும் இப்பகுதிகளுக்கு வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதார அதிகாரிகள், கிராம வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் தொலைபேசியில் எடுத்துரைத்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் மூத்த அமைச்சர்களும் மீட்பு நிவாரணப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு வருகிறார்கள் என்பதையும் பிரதமரிடம் எடுத்துரைத்த முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசுக்கு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் சேவை மீட்புப் பணிகளுக்கு தேவைபடுகிறது என்று கோரிக்கை வைத்தார். அப்போது பிரதமர் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். எல்லாவிதமான ஆதரவும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்