முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 8 டிசம்பர் 2015      அரசியல்
Image Unavailable

காரைக்கால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேற்று காலை தமிழகம் வந்தடைந்தார். சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். காரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர் ரேடியோ மில் ரயில்வே கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் ரியான்குப்பம், கிரிமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற அவர் அங்கிருந்த மக்களை சந்தித்து அரிசி, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ஏ.நமசிவாயம், நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதனை அடுத்து மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago