முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் விடுதலை

வியாழக்கிழமை, 10 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.  போதிய சாட்சியங்களுடன் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால் வழக்கிலிருந்து சல்மான் கானை விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையின் மேற்குப்பகுதியிலுள்ள பாந்த்ராவின் அமெரிக்கன் எக்ஸ்பிரல் பேக்கரி அருகே, சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான் கானின் கார் மோதியது. இதில், நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.  இவ்வழக்கு முதலில் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது.

விபத்து ஏற்படுத்திய காரை சல்மான் கான் மதுபோதையில் ஓட்டி வந்ததாகவும், விபத்து நடந்தபோது சல்மான் கானுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காரை தான் ஓட்டி வரவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங்தான் ஓட்டினார் எனவும் சல்மான் கான் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை விசாரணை நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் நடிகர் சல்மான் கான் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், சல்மான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. வலுவான சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை குற்றவாளி என அறிவித்துவிட முடியாது. சல்மான் கான் குற்றம் செய்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே சல்மான் கானை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்