முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான்கான் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: மகாராஷ்டிர அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 11 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - சல்மான்கான் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று மராட்டிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர் சல்மான்கான் 2002–ம் ஆண்டு செப்டம்பர் 28–ந்தேதி கார் விபத்து வழக்கில் சிக்கினார். மும்பை பாந்திரா ஹில்ரோட்டில் அவரது கார் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி மீது மோதியது. இதில் பேக்கரி முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் இறந்தார், 4 பேர் காயம் அடைந்தனர். சல்மான்கானின் பாதுகாப்புக்காக அவருடன் இருந்த போலீஸ்காரர் ரவீந்திர பாட்டீல், பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சல்மான்கானை போலீசார் கைது செய்து, அலட்சியமாக வாகனத்தை ஓட்டிச்சென்று உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.  இவ்வழக்கில் நீதிபதி தேஷ்பாண்டே, கடந்த மே மாதம் 6–ந்தேதி நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

சல்மான்கான் செசன்சு கோர்ட்டை விட்டு வெளியே வராமலேயே, உடனடியாக தண்டனையை எதிர்த்து அவரது வக்கீல் மூலம் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக பரிசீலித்த நீதிபதி, நடிகர் சல்மான்கான் மீதான ஜெயில் தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், அவருக்கு ஜாமீனும் அளித்து உத்தரவிட்டார். இதனால் நடிகர் சல்மான்கான் சிறைக்கு செல்வதில் இருந்து தப்பினார். குடிபோதையில் கார் ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில் நடிகர் சல்மான்கானை மும்பை ஐகோர்ட்டு நேற்று விடுதலை செய்தது.

சல்மான்கான் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த அரசு தரப்பு வக்கீல் தவறிவிட்டதாகவும், அவருடைய போலீஸ் மெய்க்காவலர் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் நிலவுவதாகவும் கூறி, சல்மான்கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், சல்மான்கான் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை (14–ந் தேதி) முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை இணை மந்திரி ராம் ஷிண்டே, நாக்பூரில் சட்டசபை முன்பு நிருபர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago