முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மனுவை திரும்பப் பெற்றார் சல்மான் கான்

சனிக்கிழமை, 12 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

புதுடெல்லி - போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், தன் நண்பரையும் சாட்சியாக விசாரிக்கக் கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நடிகர்  சல்மான் கான் திரும்பப் பெற்றார். விபத்து ஏற்படுத்திய காரில் சல்மான் கானுடன் அவரது பாதுகாவலர் ரவீந்திர சிங் பாட்டில், நண்பர் கமால் கான், சல்மானின் டிரைவர் ஆகியோர் உடனிருந்தனர்.

விசாரணையில் மும்பை காவல் துறையிடம் அளித்த வாக்குமூலத் தில் சல்மான் கான்தான் காரை ஓட்டியதாக கமால் கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாதுகாவலர் ரவீந்திர சிங் இறந்ததை அடுத்து, கமால்கானின் சாட்சி முக்கியம் என்பதால், அவரை விசாரிக்க வேண்டும் என சல்மான்  தரப்பு வாதிட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தது. ஆனால் மும்பை உயர் நீதிமன்றம் சல்மானை வழக்கிலிருந்து விடுவித்துள்ளதால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவை சல்மான் திரும்பப்பெற்றார்.

இதனிடையே சல்மான்கான் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. இந்தி நடிகர் சல்மான்கான் 2002–ம் ஆண்டு செப்டம்பர் 28–ந்தேதி கார் விபத்து வழக்கில் சிக்கினார். மும்பை பாந்திரா ஹில்ரோட்டில் அவரது கார் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி மீது மோதியது. இதில் பேக்கரி முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் இறந்தார், 4 பேர் காயம் அடைந்தனர்.  இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கிலிருந்து நடிகர் சல்மான்கானை மும்பை ஐகோர்ட்டு வியாழனன்று விடுதலை செய்தது. சல்மான்கான் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த அரசு தரப்பு வக்கீல் தவறிவிட்டதாகவும், அவருடைய போலீஸ் மெய்க்காவலர் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் நிலவுவதாகவும் கூறி, சல்மான்கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், சல்மான்கான் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை இணை மந்திரி ராம் ஷிண்டே, நாக்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்