முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் கோவில் அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு: ஜனவரி 2ம் தேதி நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 13 டிசம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,டிச14: மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் சார்பில் அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதியன்றுசிற்பபாக நடக்கிறது. இதுகுறித்து அந்த கோவில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருகோவிலின் அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதியன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.அன்றைய தினம் அருள் மிகு மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரர் பெருமானும் ரிஷப வாகனத்தில் மதுரை வெளி வீதிகளில் சட்டத்தேர்களில் உலா வருகிறார்கள். இந்த சப்பர வீதி உலா  ஜனவரி 2ம் தேதியன்று காலை 5மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி,தெற்கு வெளி வீதி,திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேல வெளி வீதி, குட் ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு,வக்கீல் புதுத்தெரு, கீழ மாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்கு தூண், வழியாக கீழ மாசி வீதி  தேரடி வந்து சேத்தியாகும்.

உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவ பெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும். ஒரு சமயம் சிவபெருமான் அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கிறாரா என்று சோதிக்க பார்வதி தேவி ஒரு எறும்பை குவளையில் அடைத்து வைத்தார். பின்னர் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவ பெருமான் உணவு அளித்துள்ளாரா என்று பார்வதி தேவி கேட்க ஆம் என்று சிவ பெருமான் கூறினார். இதனைத்தொடர்ந்து மூடியிருந்த குவளையை பார்வதி தேவி திறந்து பார்த்தபோது எறும்பு ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சிவ பெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பு வேண்டினார்.அந்த நாளே- மார்கழி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி திதியே அஷ்டமி பிரதட்சணம் ஆகும். அந்த நாளில் அருள் மிகு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வரும் போது அந்த தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்