முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 டிசம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.,

கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்), மாரிமுத்து (ராமேஸ்வரம் நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்) ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்